கண்ணமங்கலம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.

Arani King 24x7 |4 Jan 2026 10:30 PM ISTஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி பஸ் நிறுத்த பயணிகளிடம் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெ பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெ பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி திண்ணை பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். 47வது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் எல்.ஜெயசுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வீதி வீதியாக நடந்து சென்று டீக்கடை, காய்கறி கடை, பழ கடை, மளிகை கடை, பேருந்து நிறுத்த பயணிகள் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் ஒன்றிய செயலாளர் திருமால் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் மாவட்ட துணைச் செயலாளர் சேவூர் ஜெ.சம்பத், ஆரணி ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், போளூர் ஒன்றிய செயலாளர் விமல், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், ஜெ பேரவை ஒன்றியசெயலாளர் செந்தில், பேரவை மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.டி.குமார், பாலச்சந்திரன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மாருதி ராஜி, நகரமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சுதாகுமார், மாவட்ட பிரதிநிதி துரை, ஐ.டி பிரிவு கண்ணமங்கலம் செயலாளர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் சேட்டு, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். .
Next Story
