தேவிகாபுரத்தில் வாக்காளர் சிறப்பு முகாம். ஆரணி எம்எல்ஏ ஆய்வு.

X
Arani King 24x7 |4 Jan 2026 10:36 PM ISTஆரணி அடுத்த தேவிகாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற்றதை ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆரணி அடுத்த தேவிகாபுரம் அரசு பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற்றதை ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றதில் ஆரணி சட்டமன்றத் தொகுதியில் எஸ்ஐஆர் பணிக்கு முன்பு 2, இலட்சத்து 83 ஆயிரத்து 123 பழைய வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது எஸ்ஐஆர் பணிக்கு பின்னர் 2, இலட்சத்து 46 ஆயிரத்து 208 புதிய வாக்காளர்கள் பட்டியில் வெளியாகின. இதில் 36 ஆயிரத்து 915 தகுதி இல்லாத வாக்காளர்கள் என அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் எஸ்ஐஆர் பணியில் கால அவகாசம் நீட்டித்து சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணி தொடங்கப்பட்டன. இதில் விடுபட்ட வாக்காளர்களின் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் ஆரணி அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் நடைபெற்றதில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை முன்னாள் அமைச்சரும், ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் சென்று வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்தார். பின்னர் பிஎல்ஒ நிர்வாகிகளிடம் முறையாக பணிகளை மேற்கொள்ளவும் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் சேர்க்கவும் அறிவுறுத்தினார். இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் வழக்கறிஞர் க.சங்கர், ஜெயபிரகாஷ், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார் ஒன்றிய துணைச் செயலாளர் ஜெய்சங்கரமூர்த்தி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கணேசன் மாவட்ட பிரதிநிதி சகாயம், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் பச்சமுத்து, மணிகண்டன் உள்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story
