கரூரில் நிலப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற பெண்ணால் பரபரப்பு.
Karur King 24x7 |5 Jan 2026 12:03 PM ISTகரூரில் நிலப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற பெண்ணால் பரபரப்பு.
கரூரில் நிலப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற பெண்ணால் பரபரப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காவல்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரசு. இவரது வீட்டின் அருகாமையில் வசித்து வரும் ஐயர் என்ற நபர் தன்னுடைய இடம் சரசு வீட்டு நிலத்தில் உள்ளது என பிரச்சனை செய்துள்ளார். இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால் இது தொடர்பாக குளித்தலையில் உள்ள நில அளவை அலுவலகத்தில் சரசு தனது வீட்டை அளவிட்டு தருமாறு விண்ணப்பம் அளித்துள்ளார். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட நில அளவையர் சம்பந்தப்பட்ட அய்யர் உடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு சரசுவை பலமுறை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சரசு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5 லிட்டர் மண்ணெண்ணெய் கொண்டு வந்து தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சரசுவை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு காவல்துறையினர் சரசுவை அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த சரசு எனது பிரச்சனையில் நில அளவையர் நில அளவை செய்வதற்காக நான் மனு கொடுத்திருந்த போதும் எதிர் தரப்பை சேர்ந்த நபருடன் கூட்டு சேர்ந்து வேண்டுமென்றே என்னை அலைக் கழித்து வருகிறார். இதனால் இன்று அரசை அச்சப்படுத்துவதற்காக நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரவில்லை. உண்மையிலேயே மண்ண மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கோடு தான் வந்தேன் என்றார். நில நில விவகாரம் தொடர்பாக பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற விவகாரம் கரூரில் பரபரப்பு ஏற்படுத்தியது.
Next Story






