திருக்குவளை அருகே கீரங்குயில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முன் விரோத தகராறில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

X
Nagapattinam King 24x7 |5 Jan 2026 2:07 PM ISTகீரங்குடி
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், ஆதமங்கலம் கீரங்குடி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ரவி(60) தரப்பினர் அதே தெருவை சேர்ந்த சக்திவேல் தரப்பினர் ஆகியோருக்கிடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது . கீரங்குடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கிய நிலையில் பணியை நிறுத்துவதற்கு சக்திவேல் தரப்பினர் கிராமத்தில் உள்ளவர்களிடம் கையொப்பம் பெற்றுள்ளனர். அப்போது கலியபெருமாள் மகன் கார்த்தி (40) தம்பி வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் கையொப்பம் கேட்டுள்ளனர். கையெழுத்து போட மறுக்கவே வீட்டில் இருந்த கார்த்திக்கும் நாகமுத்து மகன் சிவபாலன், கரியப்பன் மகன் சக்திவேல்(48), சக்திவேல் மகன் பிரகாஷ்(28) ஆகியோர் கார்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது.அப்போது தடுக்க வந்த கார்த்தியின் சித்தப்பா ரவியையும் தாக்கியுள்ளனர். இதில் ரவி காது, மூக்குப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு மூக்கு , காதில் இரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், ரவியை ஒரத்தூரில் உள்ள நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார். கார்த்தி நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதை எடுத்து கீரங்குடி பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட பிரகாஷ், சக்திவேல், சிவபாலன் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பிரகாஷ்,சிவபாலன் ஆகியோரை கைது செய்தனர். சக்திவேல் லேசான காயத்தோடு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரவி மனைவி முருகாயி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story
