ராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் பூமி பூஜை நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |5 Jan 2026 5:14 PM ISTசீதக்காதிவிளையாடு மைதானவளாகத்தில் 12.35 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கைஇலை ஓடுதளபாதை அமைப்பதற்கு பூமி பூஜையினை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சேதுபதி விளையாட்டு மைதான வளாகத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் 12.35 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இலை ஓடுதள பாதை அமைப்பதற்கான பூமிபூஜை பணியினை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்து விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரண தொகுப்புக்களை பயனாளிகளுக்கு வழங்கியும்,கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரண தொகுப்புக்களை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு வழங்கிடும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன்தங்கம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
Next Story



