கரூரில் காவிரி ஆற்றின் குறுக்கே பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் போக்குவரத்தை துவக்க மாவட்ட ஆட்சியரிடம் பாமக சார்பில் மனு.

கரூரில் காவிரி ஆற்றின் குறுக்கே பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் போக்குவரத்தை துவக்க மாவட்ட ஆட்சியரிடம் பாமக சார்பில் மனு.
கரூரில் காவிரி ஆற்றின் குறுக்கே பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் போக்குவரத்தை துவக்க மாவட்ட ஆட்சியரிடம் பாமக சார்பில் மனு. கரூர் திருச்சி நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கரூர் மாவட்டம் நெரூர்-திருச்சி மாவட்டம் உன்னியூர் இடையே உயர் மட்ட போக்குவரத்து பாலம் கட்டி பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் உள்ளது. இந்த பாலத்தின் இரு பகுதிகளிலும் விவசாயிகள் பொதுமக்கள் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் என ஏராளமானோர் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. இதுவரை இந்த பாலத்தில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தாத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் மணி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரின் வாராந்திர குறை தீர் கூட்டத்தில் விரைவில் பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டி மனு அளித்தார். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, இந்த பாலத்தில் போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதன் வாயிலாக கரூர், திருச்சி,நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Next Story