நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
Komarapalayam King 24x7 |5 Jan 2026 9:18 PM ISTதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில்திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில், திருச்சியில் நடந்த மாநில செயற்குழுவின் முடிவின் படி, சாலை பணியாளர்கள் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமல்படுத்த வேண்டும். ஆனால் அதனை அமல்படுத்தாமல் மேல்முறையீடு சென்ற நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம முன்பு நடந்தது. இதில் நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர், முன்னாள் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் கவிதா, செல்வி, மணிவண்ணன், மாதேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
