ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றிச்சாவடி நிகழ்ச்சி கிளைக் கழக செயலாளர்கள் மூர்த்தி, ரமேஷ் தலைமையில் நடைபெற்றது

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றிச்சாவடி நிகழ்ச்சி கிளைக் கழக செயலாளர்கள் மூர்த்தி, ரமேஷ் தலைமையில் நடைபெற்றது
X
அதனைத் தொடர்ந்து, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ 18.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை ஒன்றிய குழு தலைவர் அசோக் திறந்து வைத்து இளைஞர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றிச்சாவடி நிகழ்ச்சி கிளைக் கழக செயலாளர்கள் மூர்த்தி, ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் அசோக், ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணி, தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழக அரசு பெண்களுக்கேன தனி திட்டங்களை வகுத்து பெண்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது எனவும், மக்கள் சார்ந்த திட்டங்கலான மகளிர் உரிமைத்தொகை விடியல் பயணம், உயர்கல்விக்கு ஊக்கத் தொகை வழங்குதல், மக்களைச் தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு பொதுமக்களுக்கு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ 18.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை ஒன்றிய குழு தலைவர் அசோக் திறந்து வைத்து இளைஞர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய துணை செயலாளர்கள் அலெக்சாண்டர், குப்பன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சலா பாலு, வெங்கடேசன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆரூர் குமார், துணை அமைப்பாளர் மதிவாணன், வழக்கறிஞர் பிரிவு எம் கே எம் முரளி, நேதாஜி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Next Story