கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மாலத்தீவு வாழ் தமிழக ஆசிரியர்கள் சமூகத்தின் சர்வதேச கல்விப் பரிமாற்ற நிகழ்வு மற்றும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
Karur King 24x7 |6 Jan 2026 11:35 AM ISTகரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மாலத்தீவு வாழ் தமிழக ஆசிரியர்கள் சமூகத்தின் சர்வதேச கல்விப் பரிமாற்ற நிகழ்வு மற்றும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மாலத்தீவு வாழ் தமிழக ஆசிரியர்கள் சமூகத்தின் சர்வதேச கல்விப் பரிமாற்ற நிகழ்வு மற்றும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் மாலத்தீவு வாழ் தமிழக ஆசிரியர்கள் சமூகம் சார்பாக சர்வதேச கல்விப் பரிமாற்ற நிகழ்வு மற்றும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமைப்பின் கௌரவத் தலைவரும், பரணி பார்க் கல்விக் குழும சீனியர் முதல்வருமான முனைவர் சி. இராமசுப்பிரமணியன், நிறுவனர்கள் திரு. சந்திரகுமார் மற்றும் திரு. எட்வின் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. எஸ். மோகனரங்கன், செயலார் திருமதி. பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் திருமதி. சுபாஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக, மாலத்தீவிலிருந்து வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளுக்குப் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பரணி பார்க் சாரண, சாரணியர் மற்றும் என்.சி.சி (NCC) மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. மேலும், விருந்தினர்களைக் கௌரவிக்கும் வகையில் மாணவர்களின் யோகா, சிலம்பம் மற்றும் மல்லர் கம்பம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சர்வதேச கல்விப் பரிமாற்ற நிகழ்வின் ஒரு பகுதியாக, கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டத்தைக் (University of Cambridge International Examinations Curriculum) கற்பிக்கும் மாலத்தீவு வாழ் ஆசிரியர்களுக்கும், என்.சி.இ.ஆர்.டி (NCERT) மற்றும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் பரணி ஆசிரியர்களுக்கும் இடையே சிறப்பான கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. மேலும், மாலத்தீவு ஆசிரியர்கள் பரணி பள்ளி வகுப்பறைகளுக்குச் சென்று கற்றல் கற்பித்தல் நுணுக்கங்களைப் பார்வையிட்டனர். நிகழ்வின் நிறைவாக நடைபெற்ற சமூகத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், 2026-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை மாலத்தீவு தமிழக ஆசிரியர்கள் சமூகத்தின் நிறுவனர்கள் எட்வின் ராஜ், சந்திரகுமார் மற்றும் கௌரவத் தலைவர் முனைவர் சி. இராமசுப்பிரமணியன் ஆகியோர் அறிவித்தனர். அதன்படி, எட்வின் ஃபிராங்க்ளின், வெங்கடேஷ் சோமசுந்தரம், நிஷா க்ளீடஸ், சுப்பிரமணியன், அந்தோணி ராஜா, ஜுடின் மற்றும் சுரேஷ் முத்துசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Next Story






