ராசிபுரம் அருகே தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்...

X
Rasipuram King 24x7 |6 Jan 2026 2:22 PM ISTராசிபுரம் அருகே தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌரிசங்கர் (47),பவானி(35) தம்பதியனரின் இளைய மகள் காயத்ரி(14) இவர் குருசாமிபாளையம் செங்குத்தர் மகாஜனம் உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு பயன்று வருகிறார். மாணவி சிறு வயதில் இருந்து விளையாட்டு போட்டியில் ஆர்வம் மிகுந்து உள்ள நிலையில் தற்போது டெல்லியில் தேசிய அளவிலான நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் மாணவி காயத்ரி கலந்து கொண்டு குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். குண்டு எறிதல் போட்டியில் 3ம் இடமும், தட்டறிதல் போட்டியில் 2ம் இடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தார். மாணவி 3 போட்டியிலும் வெற்றி பெற்று தனது சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் கிராம மக்கள் மாணவியை வரவேற்கும் விதமாக குருசாமிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து, மாணவியை ஆட்டோவில் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பள்ளிக்குச் சென்ற மாணவிக்கு,பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் என பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்..
Next Story
