செங்கோட்டை நூலகத்தில் பாராட்டு விழா நடந்தது

X
Tenkasi King 24x7 |6 Jan 2026 7:48 PM ISTசெங்கோட்டை நூலகத்தில் பாராட்டு விழா நடந்தது
செங்கோட்டை நூலகத்தில் கடையநல்லூர் M.L.A க்கு பாராட்டு விழாவும் , போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற ஒன்பது மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. செங்கோட்டை நூலகத்தில் வைத்து நூலகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் வழங்கிய கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா அவர்களுக்கு வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 1)பாலாஜி 2)லட்சுமணன் 3)திருமலை குமார் 4)குரு முருகன் 5)தங்கபாண்டி 6)செந்தில் முருகன் 7)கார்த்திக் 8)இசக்கி பாபு 9)விஷ்ணு பிரியா ஆகிய ஒன்பது மாணவ மாணவிகளுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இவ் விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆதிமூலம் இணை செயலாளர் செண்பக குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கோட்டை நூலகத்தின் பொறுப்பு நூலகர் நாகராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி. ரம்யா அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் . எழுத்தாளர் இளங்குமரன், ஐயப்பன், கோபாலகிருஷ்ணன், ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன், பணி நிறைவு மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன், பணி நிறைவு நூலகர் ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் . இந்நிகழ்வினை அரசு சட்ட கல்லூரி மாணவர் மாரி செல்வம் அவர்கள் தொகுத்து வழங்கினார். முடிவில். வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் சுதாகர் நன்றி உரையாற்றினார்.
Next Story
