திருச்செங்கோடு ஜேடர்பாளையம் செல்லும் ஆறாம் எண் கொண்ட அரசு பேருந்து நேர் மாற்றம் காரணமாக பயணிகளால் பேருந்து நிலையத்தில் சிறை பிடிப்பு

திருச்செங்கோடு சோழசிராமணி ஜேடர்பாளையம் செல்லும் 6ம் எண் கொண்ட நகர பேருந்து வழக்கமாக 6:15 மணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்ததை 5.45 க்கு மாற்றியதால் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் பள்ளி குழந்தைகள் அவதிப்படுவதாகவும் கூறி பெண்கள் பேருந்தைசிறை பிடித்து பெண் பயணிகள் போராட்டம்
திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து சோழசிராமணி வழியாக ஜேடர்பாளையம் வரை செல்லும் விடியல் பயண பேருந்து வழக்கமாக 6:15 மணிக்கு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இதனால் உட்புற கிராமங்களில் இருந்து திருச்செங் கோட்டிற்கு வேலைக்கு வரும் பெண்கள் பள்ளி மாணவிகள் ஊருக்கு திரும்பி செல்லவசதியாக இருந்து வந்தது இதனை தற்போது 5:45 மணி என மாற்றியதால் ஊருக்கு செல்ல முடியாமல் அனைவரும் அவதிப் படுவதாகவும்விடியல் பேருந்துக்கு பதிலாக தனியார் பேருந்தில் செல்வதால் கட்டணம் செலுத்தி செல்வதோடு அது உட்புற கிராமங்களுக்கு அந்த பேருந்து செல்லவில்லை என்பதால் இரவு வீடு திரும்ப 9 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது இதனால் எங்களை வேலைக்கு அனுப்ப மறுக்கிறார்கள் எனவேவழக்கம்போல் இந்த பேருந்து 6:15 மணிக்கு இயக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் 6.15 மணி வரை பேருந்து சிறை பிடித்தனர். இதனால் பேருந்து நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துபேருந்தில் பயணிக்கும்பெண் பயணிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவதுகடந்த 10 ஆண்டுகளாக தினசரி 6 15 மணிக்கு எங்களுடைய வேண்டுகோளை ஏற்று இயக்கப்பட்டு வந்த ஆறாம் எண் கொண்ட விடியல் பயண பேருந்து தற்போது ஐந்தே முக்கால் மணிக்கு இயக்கப்படுகிறதுஇதனால் வேலை முடிந்து வரும் பெண்கள் பள்ளி முடிந்து வரும் பெண் குழந்தைகள் பேருந்தில் பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர் இதற்கு அடுத்தது செல்லும் தனியார் பேருந்தில் கூட்டம் அதிகமாக அலைமோதுவதால் பயணிக்க முடியவில்லை மகளிர் விடியல் பேருந்தில் கட்டணம் இல்லை தனியார் பேருந்தில் பயணித்தால் கட்டணம் செலுத்த வேண்டும் அது மட்டுமில்லாமல் தனியார் பேருந்து மெயின் ரோட்டிலேயே நின்று விடுகிறது உட்புற கிராமங்களுக்கு செல்வதில்லை இதனால் அடுத்த பேருந்தில் சென்றால் 9:30 மணி ஆகிவிடுகிறது இதனால் எங்களை வேலைக்கு அனுப்ப மறுக்கிறார்கள் எங்களுக்கு வழக்கம் போல் இந்த பேருந்தை6:15 மணிக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு வட்டார போக்குவரத்து அலுவலர் மாவட்ட ஆட்சியர் என பல தரப்பிற்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே எங்களுக்கு இந்த பேருந்தை 6:15 மணிக்கு இயக்கும்படி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் அது வரை இந்த பேருந்தை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தி இருந்தோம் காவல்துறையினர் போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில்வழக்கம்போல 6:15 மணிக்கு பேருந்தில் ஏறி பயணிக்கிறோம் என பேருந்து பயணிகள் தெரிவித்தனர். பேட்டி:1.கௌரி, 2.ராதிகா 3.மங்கையர்க்கரசி
Next Story