அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

அரசு உதவி பெறும்  பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின்  மடிக்கணினி வழங்கும் விழா
X
குமாரபாளையம் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.
குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். கல்லூரி தலைவர் ஈஸ்வர், தாளாளர் புருஷோத்தமன் தலைமை வகித்து, 131 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி வாழ்த்தி பேசினர். இவர்கள் பேசியதாவது: மாணவர்களுக்காக செயல்படுத்திய உலகம் உங்கள் கையில் திட்டத்திற்கு தமிழக முதல்வர் ,துணை முதல்வர், முதன்மைச் செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக ஆணையர் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி. இளைய சமுதாயத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணினியை கொண்டு நவீன உலகத்தில் ஏ.1 தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கணினித் திறன்களை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் உலகின் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் மேம்பாடு, மென்பொருள் பற்றி கற்றுக்கொள்ளுதல் மிக அவசியம். உங்கள் வாழ்வின் உயர்வுக்கு இந்த மடிக்கணினி உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர்கள் பேசினர். எல்காட் நிறுவனத்தின் பொறியாளர் சசிகுமார் பங்கேற்று, லேப்டாப் திறன் பயன்பாடு குறித்து பேசினார். பெற்றோர் உள்பட பேராசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story