நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி: ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர் நகராட்சி ஆணையாளரிடம் மனு...

X
Rasipuram King 24x7 |6 Jan 2026 9:06 PM ISTநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி: ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர் நகராட்சி ஆணையாளரிடம் மனு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, அணைப்பாளையம் பகுதியில் ரூ. 10.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள அணைப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சில எதிர்ப்புக்கள் எழுந்தாலும், கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாசு, அவர்கள் தலைமையில் அதிமுக, பிஜேபி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் நிவேதிதா அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற (வழக்கு எண் WP.NO.41551/2025) உத்தரவுக்கு எதிராக அணைப்பாளையம் பகுதியில் நடந்து வரும் ராசிபுரம் நகர பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
