திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு பெற டோக்கன் வழங்கும் நிகழ்ச்சிநகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார்
Tiruchengode King 24x7 |6 Jan 2026 9:08 PM ISTதிருச்செங்கோடு நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு பெற டோக்கன் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு மலை அடிவாரம் அண்ணா பூங்கா நியாய விலை கடையில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார் நியாய விலை கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கினர்
தமிழ்நாடு அரசு பொங்கல் திருநாளை ஒட்டி அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டை தாரருக்கும்ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு, ஆகிய பரிசு தொகுப்பும் அதனுடன் ரூ 3000 பண பரிசும் வழங்க உத்தரவிட்டுள்ளது.இந்தப் பரிசு பொருட்களை பெற நியாய விலை கடைகளில்கூட்டம் அலைமோத கூடாது என்பதற்காக அந்தந்த நியாய விலை கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்று நாட்களுக்கு எனப் பிரித்து டோக்கன் வழங்கப்படுகிறது திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைக்தாரர்களுக்கும் அந்தந்த நியாய விலை கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். எட்டாம் தேதி முதல்பொருட்கள் வழங்க உள்ளதால் நியாய விலை கடைகளுக்கு வேட்டி சேலைகள் கரும்புகள் வந்து சேர தொடங்கியுள்ளன.இந்த நிலையில் டோக்கன் வழங்கும் பணியினை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பதினைந்தாவது வார்டு பகுதியில் உள்ளகுலாலர் தெரு மற்றும் அண்ணா பூங்கா நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரராக உள்ள வீடுகளுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார். நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும்போது நகர்மன்ற தலைவர் உடன் இருந்தார்.
Next Story


