வெனிசுலா அதிபரை கைது செய்த டிரம்பின் அராஜக நடவடிக்கையை கண்டித்துஎலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தின் அருகே ட்ரம்பின் உருவ பொம்மை எரித்து போராட்டம்
Tiruchengode King 24x7 |6 Jan 2026 9:31 PM ISTவெனிசுலா அதிபரை கைது செய்த டிரம்பின் அராஜக நடவடிக்கையை கண்டித்து திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தின் அருகே ட்ரம்பின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து எரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெனிசுலா அதிபர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ஜனாதிபதி கைது செய்தார் இந்த கைது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மேலும் கம்யூனிஸ்ட் நாடான வெனிசுலா நாட்டின் அதிபரை கைது செய்ததை கண்டித்தும் அதிபரையும் அவரது மனைவியையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையம் கிராம பேருந்து நிறுத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை வகித்தார். வெனிசுலா அதிபரை கைது செய்ததை கண்டித்தும் அவரை விடுவிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனிடையே டிரம்ப்பின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து கொண்டு வரப்பட்டது உருவ பொம்மையை வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது இதனை அடுத்து உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரம்புக்கு எதிராகவும் வெனிசுலா அதிபரை விடுவிக்க வலியுறுத்தியும் அவரது மனைவியை விடுவிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்
Next Story


