குளித்தலை வைகைநல்லூர் கிராமத்தில் கரும்பு அறுவடை பரிசோதனை

திருச்சி மண்டல தேசிய மாதிரி ஆய்வு நிறுவன நிறுவன அதிகாரி தலைமையில் ஆய்வு
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்து வைகைநல்லூர் தெற்கு கிராமத்தில் திருச்சி மண்டல தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அதிகாரி லட்சுமணன் தலைமையில், துணை வேளாண்மை அலுவலர் கணேசன் முன்னிலையில், வை.புதூர் பிரியா வடிவேல் கரும்பு தோட்டத்தில் புள்ளி இயல் துறையின் பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழ், கரும்பு அறுவடை பரிசோதனை நடைபெற்றது. இந்த பயிர் அறுவடை பரிசோதனைகளின் நோக்கமாவது: ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு பயிரிலும் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் மகசூலை கணிக்கப்பட்டு, இதனால் வட்டாரம் தோறும், வட்டம் தோறும், மாவட்டம் தோறும் ஒவ்வொரு பயிரின் மகசூலும் கணிக்கப்பட்டு, மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதை கணிப்பதற்காகவே இம்மாதிரி பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இந்த கரும்பு வயலானது 2025 ஜனவரி மாதத்தில் நடவு செய்யப்பட்டு, 2025 ஜூலை மாதத்தில் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி 2026 இம்மாதம் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, புள்ளி இயல் துறை, கரும்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கூட்டு ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறது. இந்த கரும்பு பயிர் அறுவடை பரிசோதனை என்பது திருச்சி மண்டல தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அதிகாரி லஷ்மணன், குளித்தலை வேளாண்மை அலுவலர் மகேந்திரன், துணை வேளாண்மை அலுவலர் கணேசன், பயிர் அறுவடை பரிசோதனை வல்லுநர் அகிலன், உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வராஜ், மற்றும் இ.ஐ.டி பாரி கரும்பு ஆலையின் கரும்பு அலுவலர் சந்தோஷ் குமார் கரும்பு ஆய்வாளர் முருகேசன், கரும்பு விவசாயிகள் பிரியா, வடிவேல், வெண்ணிலா, செல்வராஜ், பத்ரி மற்றும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
Next Story