மாணவர்களுக்கான இயற்கை முகாம்
Pudukkottai King 24x7 |7 Jan 2026 11:53 AM ISTதமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம் ஜனவரி 7 2026 புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இரண்டு நாள் நடைபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாமினை (NATURE CAMP) மாவட்ட வருவாய் அலுவலர் திரு அ.கோ இராஜராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு கூ சண்முகம் மாவட்ட வன அலுவலர் திரு சோ கணசலிங்கம் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் ஜெ. ஆரோக்கியராஜ் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் திருமுருகன் திரு வெள்ளைச்சாமி ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு ராஜேந்திரன் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் பள்ளித் துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து புதுக்கோட்டை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு எஸ் ரங்கராஜ் மாவட்ட ஆட்சியரக பசுமை தோழர் செல்வி கமலி ஆகியோர் கலந்து கொண்டனர் . சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் இயற்கை குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறை மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இயற்கை முகாம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் முத்துக்குடா தீவு ஜெகதாப்பட்டினம் கடற்கரை மற்றும் திருச்சிராப்பள்ளி பறவைகள் பூங்கா முக்கொம்பு சுற்றுலா தளம் ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் இயற்கை முகாம் ஆனது நடைபெற உள்ளது . என் முகாமில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு எஸ். ரங்கராஜ் பசுமை தொடர் செல்வி கமலி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு இளம் தலைமுறை மாணவர்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டினை அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்க உள்ளனர். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த பேச்சு ஓவியம் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில் 10 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்கள் 10 பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Next Story



