கரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.

கரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.
கரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம். தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் பத்மா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அங்கன்வாடி மாவட்ட தலைவர் கலா, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் புஷ்பவல்லி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எப்சிராணி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிபடி வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு பென்ஷன் ஆராய்ந்து 6,750 அகவிலை படியுடன் வழங்கிட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 6000-த்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியருக்கு தேசிய மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும். ஈமச்சடங்கு நிதி 25 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஈட்டிய விடுப்பு ஈட்டா விடுப்பு வழங்க வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் காலங்களுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும். ஆய்வுக் கூட்டங்களுக்கு வந்து செல்ல நிலையான பயணப்படி மாதம் ரூபாய் 300 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story