ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள வேம்பி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் திமுக கழக தலைமை செயற்க்குழு உறுப்பினர் கலைமணி தலைமையில் நடைபெற்றது.

X
Ranipet King 24x7 |7 Jan 2026 2:21 PM ISTஇந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் அசோக், நகர செயலாளர் சேது ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் பேசியதாவது,
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள வேம்பி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் திமுக கழக தலைமை செயற்க்குழு உறுப்பினர் கலைமணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் அசோக், நகர செயலாளர் சேது ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் பேசியதாவது, திருப்பரங்குன்றத்தில் தீபத்தை ஏற்ற வேண்டும் என நினைக்கின்றனர் நபர்களுக்கு நான் சொல்கிறேன் இது சித்தர்கள் வாழ்ந்த பூமி ஆகவே ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்ய முடியாது. கல்வி ஒன்ரே ஆயுதம் என நினைத்துதான் நமது தமிழக முதல்வர் உயர்கல்வியை ஊக்குவிக்கவே மாணவர்களுக்கு மடிகணினியை நமது முதல்வர் வழங்கினார். அதேபோல் தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் மக்களுக்கான திட்டங்களையும் பட்டியலிட்டு பொது மக்களுக்கு தெரிவித்தார். எனவே வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க பொது மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக வேம்பி பேருந்து நிறுத்தம் பகுதியில் புயதாக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நிழல் கூட்டத்தினை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத் தலைவர் பாலி சுப்பிரமணி, கவுன்சிலர்கள் ஜீவா குப்பன், சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் லதா வெங்கடேசன், அஞ்சலா பாலு, சத்தியமூர்த்தி, லட்சுமி பாஸ்கர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்..
Next Story
