புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பு அமைச்சர்

X
Pudukkottai King 24x7 |7 Jan 2026 4:07 PM ISTஎந்த ஒரு பெரிய கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாது என்று தான் நாங்கள் கூறினேன் தவிர சிறிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வதற்கு உண்டான வாய்ப்பு உள்ளது அதேபோல் தான் பாமக என்று சேர்ந்துள்ளது
எந்த ஒரு பெரிய கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாது என்று தான் நாங்கள் கூறினேன் தவிர சிறிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வதற்கு உண்டான வாய்ப்பு உள்ளது அதேபோல் தான் பாமக என்று சேர்ந்துள்ளது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நேற்று அளித்த பேட்டியில் நான் எந்த தவறான கருத்தும் கூறவில்லை நீதிமன்ற தீர்ப்பில் பேய் என்று குறிப்பிட்டுள்ளது அதற்கு பதில் அளிக்கும் விதமாக தான் சுடுகாடு குறித்து நான் பேசினேன் தவிர நான் வேற எந்த தவறான கருத்தும் கூறவில்லை நான் எந்த நீதிமன்றத்தையும் அவதூறாக பேசவில்லை நீதிபதியையும் தவறாக பேசவில்லை தீர்ப்பு குறித்து தான் நான் கருத்து தெரிவித்துள்ளேன் என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நான் சந்திப்பேன் எந்த தவறான நோக்கத்திலும் நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் தமிழகத்தில் ஒன்று நடக்காது அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து எடப்பாடி கூறியுள்ளது அரசியல் நோக்கம் கொண்டதுதான் இது வழக்கமாக அனைவரும் கொடுப்பதுதான் நாங்கள் எந்த தவறும் செல்லவில்லை எந்த ஊழலும் செய்யவில்லை... புதுக்கோட்டையில் அமைச்சராக ரகுபதி பேட்டி புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் லேப்டாப் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களும் கூறுகையில் அவர்கள் பேய் இருக்கு என்று கூறியதால் தான் நான் சுடுகாட்டை பற்றி கூறியுள்ளேன் அது என்ன தவறு. அரசு பேய்க்கதை சொல்கிறது என்று கூறும் போது ஒரு அமைச்சர் சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும் நடுரோட்டில் எரிக்கக் கூடாது என்று சொல்வதிலே என்ன தவறு உள்ளது. இதனை தவறாக புரிந்து கொள்கிறீர்கள். நான் நேற்று கூறிய கருத்துக்களில் நீதிமன்ற அவமதிப்பு என்று எதுவும் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டுதான் பேசினேன். நீதிமன்றத்தை அவமதித்து எதுவும் பேசவில்லை. ஆனால் முந்திய தீர்ப்புகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டி பேசினேன். அப்படி சுட்டிக்காட்டி பேசுகிற உரிமை வழக்கறிஞரான எனக்கும் உண்டு. திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் உண்டா என்று நாங்கள் கேட்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பவர் தான் அதை நிரூபிக்க வேண்டும். இதற்கு முன்பாக அந்த கல் தூணிலே தீபம் ஏற்றி உள்ளனர் என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அரசுதான் நிரூபிக்க வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதுதான் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வைக்கப் போகிற வாதம். அந்த வதத்தைத் தான் நான் சொல்கிறேனே தவிர நீதிமன்றத்தை நான் அவமதிக்கவில்லை. நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் திமுகவிற்கு இல்லை. எவ்வளவு பாதிப்பு வந்தாலும் நாங்கள் நீதிமன்றத்தை அவமதிக்க மாட்டோம். நான் நாகரீகம் இல்லாமல் என்ன பேசினேன் சொல்லுங்கள். ஏதாவது தவறாக பேசி உள்ளேனா ஒரு உதாரணம் சொல்லும் போது வேறு என்ன உதாரணத்தை சொல்ல முடியும். நான் வேறு ஏதும் தவறாக பேசி உள்ளேனா. ஜனநாயகன் திரைப்படத்தைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை, எந்த சினிமா எப்போது வருகிறது என்ற கவலையில்லை நாங்கள் அரசியல் வேலை பார்த்துக் கொண்டுள்ளோம். நாங்கள் தேர்தல் வேலை பார்த்துக் கொண்டுள்ளோம். சினிமா பணியை நாங்கள் தற்போது பார்க்கவில்லை. அரசியலோடு அதை தொடர்புபடுத்தி நாங்கள் பார்க்கவில்லை. அமித்ஷா நிறைந்த கட்சி திமுக என்றால் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். சும்மா பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது. பாஜகவிற்கு வேண்டுமென்றால் 3200 கோடி ரூபாய் தேர்தல் நிதி வந்துள்ளது. அது எப்படி வந்தது அது ஆண்டவனுக்கு தான் தெரியும். எடப்பாடி கொடுத்த ஊழல் பட்டியல் வழக்கமாக கொடுக்கப்படும் பட்டியல் தான், அதை தேர்தலுக்காக கொடுத்துள்ளார் தேர்தல் பரப்புரைக்காக கொடுத்துள்ளார், தேர்தல் மேடைகளில் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம் மறுப்பதற்கான தைரியம் எங்களுக்கு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் என்ற கனவு மெய்க்காது என்று சொல்வதற்கு அமித்ஷா யார்,மெய்ப்பிக்க வைக்க வேண்டியது திமுகவின் கடமை, எங்கள் தொண்டர்கள் செய்ய வேண்டிய கடமையை அமித்ஷா எப்படி செய்வார் பாஜக தொண்டர்கள் என திமுகவிற்கு வேலை பார்க்கப் போகிறார்களா...? *தேர்தல் நெருங்க நெருங்க வருகின்ற எல்லா பந்துகளையும் முதல்வர் ஸ்டாலின் சிக்சராக அடித்துக் கொண்டுள்ளார் . எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா ஆகியோர் நோபல் போட்டுக் கொண்டுள்ளனர் . ஓவரின் எண்ணிக்கையை எங்களுக்கு உயர்த்தி கொடுத்துக் கொண்டுள்ளனர். 6 பால் போடவேண்டிய இடத்தில் ஒன்பது பந்துகள் போடுகின்றனர் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் . மக்கள் மனதில் எங்களுக்கு வரவேற்பு உள்ளது நாங்கள் அடிக்கின்ற ஒவ்வொரு ஷாட்டுகளும் சிக்ஸராக மாறிக் கொண்டுள்ளது . நிச்சயமாக எங்களது வெற்றியை தடுப்பதற்கு எந்த சக்தியாலும் தமிழகத்தில் முடியாது. திருப்பரம்குன்றம் விவகாரத்தில் என் புது இடத்தில் விளக்கேற்ற வேண்டும் என்று தேர்ந்தெடுக்கிறீர்கள்.நாளை திருவண்ணாமலையில் இதே போல் பிரச்சினையை ஏற்படுத்துவீர்கள். கேட்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா..? இது இந்து சமய அறநிலை துறையின் ஆளுமைக்கு உட்பட்டது. முடிவெடுக்க வேண்டியது அவர்கள் .தற்போது நீதிமன்றம் ஒரு தீர்ப்பை சொல்லி உள்ளது அதற்கு கட்டுப்பட வேண்டும். கார்த்திகை தீபம் வரையில்,அதற்கு முன்பாகவே உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பை வாங்கி விட்டால் அதைப் பற்றி கவலை இல்லை.உச்சநீதிமன்றத்தில் நிச்சயமாக நல்ல தீர்ப்பு வாங்கி விடுவோம். விஜய்க்கு சிபிஐ சம்பன் அளிப்பது பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை அது பற்றி எங்களுக்கு தெரியாது- .
Next Story
