திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள திப்பு சுல்தான் காலத்திய ஈத்கா மைதானம் விரிவாக்கம் செய்து சீரமைக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது

X
Tiruchengode King 24x7 |7 Jan 2026 7:28 PM ISTதிப்பு சுல்தான் காலத்திய ஈத்கா மைதானம் விரிவாக்கம் செய்து சீரமைக்கப்பட்டு திறப்பு விழா திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் நுழைவு வாயிலையும் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் சுபேர்கான் ஈத்கா மினாரையும் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்திகல்வெட்டையும் திறந்து வைத்தனர்
திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் திப்பு சுல்தான் காலத்திய ஈத்கா மைதானம் ஒன்று உள்ளது இந்த மைதானத்தில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் காலங்களில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகை நடத்துவது வழக்கம்.இந்த ஈத்கா மைதானம்சுற்றிலும் முட் செடிகளாலும் சுற்றுச் சுவர் இல்லாமல் பாதுகாப்பு இல்லாமல் தரை தளம் பெயர்ந்தும் இருந்தது இந்த நிலையில் தனியார் நிறுவனத்தினர் தங்களது சொந்தச் செலவில் ஈத்கா மைதானத்தை விரிவாக்கம் செய்து சீரமைத்து கொடுத்தனர் இவ்வாறு சீர் அமைக்கப்பட்ட ஈத்கா மைதான திறப்பு விழா இன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர்ஈஸ்வரன் நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஈத்கா மினாராவைதிமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் சுபேர்கான் திறந்து வைத்தார்.நிகழ்ச்சி குறித்து அமைக்கப் பட்டிருந்த கல்வெட்டைநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் சுரேஷ் பாபு,திருச்செங்கோடு கிழக்கு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,16 வது வார்டுதிமுக செயலாளர் முத்தவல்லியுமானராஜா முகமது,செயலாளர் ஜாகிர் பாஷா , பொருளாளர் ஷேக் தாவூது,ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.தற்போது உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் திருச்செங்கோடு மற்றும் கொக்கராயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர் வீடுகளை இடித்து விட்டதாகவும் அதற்கான உரிய நடவடிக்கை எடுத்து தர வேண்டும் எனவும்நிகழ்ச்சிக்கு வந்திருந்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் வக்பு வாரிய குழு உறுப்பினர் சுபேர்கான் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
Next Story
