வநேட்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்(முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு வாரியத் தேர்வில் மாநில அளவில் சாதனை..

வநேட்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்(முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு வாரியத் தேர்வில் மாநில அளவில் சாதனை..
X
வநேட்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்(முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு வாரியத் தேர்வில் மாநில அளவில் சாதனை..
வநேட்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்(முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் (தன்னாட்சி)) அக்டோபர்-2025 ன் அரசு வாரியத் தேர்வில் மாநில அளவில் சாதனைகளை படைத்த வநேட்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன் மாணாக்கர்கள்:- தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் கடந்த அக்டோபர் 2025 ஆம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான அரசு வாரிய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் இராசிபுரம் வநேட்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன் மாணாக்கர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். இக்கல்லூரியில் பயிலும் இரண்டாமாண்டு, மூன்றாம் பருவம் மாணாக்கர்கள், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இரண்டு துறைகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் துறையில் 98.68% தேர்ச்சி பெற்றுள்ளனர். மெக்கானிக்கல் துறையில் 90.59% தேர்ச்சி பெற்றுள்ளனர் மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளில் 90% தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாமாண்டில், ஐந்தாம் பருவத்தில் அனைத்து துறைகளிலும் (சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர்) 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநிலத்தில் சிறப்பிடம்- இரண்டாமாண்டு மூன்றாம் பருவத்தில் 64 மாணாக்கர்களும் மற்றும் மூன்றாமாண்டு ஐந்தாம் பருவத்தில் 76 மாணாக்கர்களும் (10/10) முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொத்தமாக 140 மாணாக்கர்கள் O Grade (10/10) முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் அக்டோபர் 2025 -ல் அரசு வாரியத் தேர்வில் கல்லூரியில் மொத்த விழுக்காடு 95.78% பெற்று மாணாக்கர்கள் சாதனை படைத்துள்ளனர். சாதனை பெற்ற மாணாக்கர்களை கல்லூரியின் தாளாளர் திரு.கே.பி.இராமசுவாமி அவர்களும், செயலாளர் திருமதி.ச.மஞ்சு முத்துவேல் அவர்களும், கல்வி இயக்குநர் Dr.R.செல்வகுமரன் அவர்களும், முதல்வர் Dr.R.மணி அவர்களும், மேலும் அனைத்துத் துறைத்தலைவர்களும் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
Next Story