அதிமுக வர்த்தக அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

X
Namakkal King 24x7 |7 Jan 2026 8:18 PM ISTசென்னையில் அதிமுக வர்த்தக அணி சார்பில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் கலந்து கொண்டு பேசினார்.
கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநில வர்த்தக அணி சார்பில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நடிகை கௌதமி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் "நாமக்கல்" ஸ்ரீ தேவி பி.எஸ்.மோகன்,நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஹா சு.தமிழ்மணி மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
