வெனிசூலா அதிபர் கைதுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

வெனிசூலா அதிபர் கைதுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
X
வெனிசூலா அதிபர் கைதுக்கு எதிராக சி.பி.ஐ. சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வெனிசூலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சர்வதேச சட்டத்தை மீறி, தனது ஏகாதிபத்திய அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்க அரசு கைது செய்துள்ளதை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குமாரபாளையம் நகர கமிட்டி சார்பில் பள்ளிபாளையம் பிரிவு ரோடு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ததை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞ்சர் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலர் ரஞ்சித்குமார், மாவட்ட பொருளர் பாலசுப்ரமணியம், நகர கமிட்டி உறுப்பினர்கள் அம்சவேணி, தேவா, மாதேஷ், மணி, பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story