அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

X
Komarapalayam King 24x7 |7 Jan 2026 8:34 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு சார்பில் பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் சரவணாதேவி தலைமையில் நடந்தது. பாலின உளவியல் குழு ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயனி வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் உளவியல் துறைத் தலைவர் மற்றும் யோகா இயக்குனர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் உளவியல் குறித்த விழிப்புணர்வு, சமூகத்தில் பாலினத்தின் பங்கு, குடும்பம் மற்றும் கலாச்சார மதிப்பீடு, மேலும் பாலின சமத்துவமின்மைக்கான காரணங்களை ஆய்வு செய்வதின் அவசியம் குறித்து பேசினார். இதில் மாணாக்கர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பெரும்பாலோர் பங்கேற்றனர். உள்ளக புகார் குழு உறுப்பினர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.
Next Story
