பொங்கல் பரிசு, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நெமிலி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்

X
Ranipet King 24x7 |7 Jan 2026 9:40 PM ISTநெமிலி பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாதாந்திர யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சேர்மன் வடிவேல் தலைமை வகித்தார். பிடிஓ ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.
ராணிப்பேட்டடை ஜன.-08 இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாதாந்திர யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சேர்மன் வடிவேல் தலைமை வகித்தார். பிடிஓ ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். அப்போது அந்தந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களாக சேர்மனிடம் அளித்தனர். பின்னர் கவுன்சிலர்கள் பேசியதாவது. ஆருண்(சுயேட்சை): பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் கம்பெனியில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். துறையூர் - பள்ளிப்பட்டறை ரோட்டை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். வடிவேல்(சேர்மன்): இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுகுமார்(அதிமுக): திருமால்பூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். மேலும் பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த வேண்டும். சேர்மன்: உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று சிசிடிவி கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூட்டத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கியதற்காகவும், மகளிர் உரிமை தொகை விடுப்பட்ட பெண்களுக்கு மீண்டும் உதவி தொகை வழங்கியதற்காகவும், பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் யூனியன் கவுன்சிலர் விநாயகம், வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி மற்றும் பிடிஓ அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Next Story
