ஆதாரங்களை சமர்ப்பித்தாரக்ளா ? அமைச்சர் ரகுபதி

ஆதாரங்களை சமர்ப்பித்தாரக்ளா ? அமைச்சர் ரகுபதி
X
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அது தீபத்தூண் இல்லை என்றும், இல்லாத ஒன்றை நடைமுறைப்படுத்துவது என்ன நியாயம் என்றும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும் திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்
இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது! திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு..அமைச்சர் ரகுபதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அது தீபத்தூண் இல்லை என்றும், இல்லாத ஒன்றை நடைமுறைப்படுத்துவது என்ன நியாயம் என்றும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும் திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அமைச்சர் ரகுபதி கூறியதாவது:- அது தீபத்தூண் என்பது தான் என்று யாராவது ஆதாரப்பூர்வ சான்று சமர்ப்பித்தார்களா? வழக்கத்தில் இல்லாத ஒன்று நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும் என்பது தான் மக்களின் கேள்வி. அரசு அன்றே 144 தடை உத்தரவு போடப்படாமல் இருந்திருந்தால் அன்றே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டு இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு இருப்பது சட்டத்திற்கு முரணானது. தீபம் ஏற்ற அனுமதித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. இல்லாத ஒன்றை புகுத்தாதீங்க என்பதே எங்களது கோரிக்கை. இல்லாத ஒன்றை கொண்டு வருவது என்ன நியாயம்.. மலை மீது இருப்பது தீபத்தூண் கிடையாது.. என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், "இதுவரை இல்லாத பழக்கத்தை, இதுவரை இல்லாத வழக்கத்தை இன்றைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாக உள்ளே கொண்டு வர முயற்சிப்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒன்று.. எங்களுக்கு தெரிந்தவரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று என்பது 100 ஆண்டு காலத்திற்கு கிடையாது. அது தீபத்தூண் தான் என்று அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தாரக்ளா?.. இல்லையே.. சர்வே கல் அங்கே நடப்பட்டது" என்றார்.
Next Story