பொங்கல் தொகுப்பை துவக்கி வைத்த முன்னாள் எம்எல்ஏ

X
Tenkasi King 24x7 |8 Jan 2026 12:36 PM ISTபொங்கல் தொகுப்பை துவக்கி வைத்த முன்னாள் எம்எல்ஏ
சங்கரன்கோவில் நகரம் 17 மற்றும் 29 வது வார்டில் உள்ள அரசு நியாய விலைக் கடைகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ 3000 அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடந்தது நிகழ்வில் திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முத்துச்செல்வி தலைமை வகித்து துவக்கி வைத்தார், இதில் வார்டு கழகச் செயலாளர்கள் தடிகாரன், தீப்பொறி ஆறுமுகம், நகர் மன்ற உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேசன், மகளிர் அணி ஜெயராணி மற்றும் சந்திரசேகர், பொன்னுச்சாமி,. நமச்சிவாயம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
Next Story
