பொங்கல் பரிசு தொகுப்பு இன்று வழங்கப்பட்டது.
Udhagamandalam King 24x7 |8 Jan 2026 4:02 PM ISTகுன்னூர் தலைவர் சுனிதா நேரு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார்
குன்னூர் சட்டமன்ற தொகுதி எடப்பள்ளி பகுதியில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பொங்கல் தொகுப்பு வேஷ்டி சேலை, கரும்பு, மற்றும் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் முன்னாள் குன்னூர் ஒன்றிய பெருந்தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் சுனிதா நேரு அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கரும்பு, பொங்கல் தொகுப்பு இலவச வேட்டிசேலை, பொங்கல் பரிசு தொகை ரூபாய் 3000 வழங்கி சிறப்பித்தார்கள். பொங்கல் பரிசுத்தொகுப்பை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட நம் மக்களை நேரில் சந்தித்து, பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம். மக்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதைச் செயலாக்குவதே எங்கள் கடமை! பொங்கல் வாழ்த்துகளுடன், மக்கள் நலப் பயணம் தொடரும்! நிகழ்ச்சியில் கோவர்த்தனன் இராமசாமி, மீனவர் அணி துணை அமைப்பாளர் நேரு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story


