குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம்

X
Kulithalai King 24x7 |8 Jan 2026 6:40 PM ISTபுதிய வாக்காளர்களாக 62 மாணவர்கள் பதிவு செய்தனர்
கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் குளித்தலை வருவாய் ஆய்வாளர் தமிழரசி, சத்தியமங்கலம் விஏஓ ராஜேஸ்வரி, மணத்தட்டை விஏஓ கௌரி ஆகியோர் கொண்ட குழுவினர் கல்லூரியில் இதுவரை தங்களை வாக்காளர்களாக பதிவு செய்யாத 18 வயது நிறைவு பெற்ற புதிய வாக்காளர்களை வாக்காளர்களாக இணைக்கும் பணியை மேற்கொண்டனர். இதில் கல்லூரி சார்பில் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாபுநாத், மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, தாவரவியல் துறை தலைவர் வேணுகோபால், வணிகவியல் பேராசிரியர் பெரியசாமி, உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மேற்பார்வை செய்தனர். இம்முகாமில் முதல் வாக்காளர்களாக 62 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
Next Story
