குளித்தலை டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் நீண்ட நாட்களாக தேங்கிய சாக்கடை கழிவு
Kulithalai King 24x7 |8 Jan 2026 6:48 PM ISTநகராட்சி பணியாளர்கள் வராததால், பணிபுரியும் காவலர் சாக்கடையை சுத்தம் செய்த சம்பவம்
கரூர் மாவட்டம் குளித்தலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வளாகத்தில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியில் வரும் தூய்மை பணியாளர்களிடம் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் சுத்தம் செய்ய கோரியும் பல நாட்களாக பணி செய்ய வராமல் இருந்ததாக தெரிகிறது. சாக்கடையில் தேங்கிய கழிவுகளால் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியால் கடும் அவதிக்கு உள்ளாகினர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் சாக்கடை கழிவுகள் அல்லும் உபகரணத்தை கடையில் வாங்கி வந்து தானாக சுத்தம் செய்துள்ளார். அதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Next Story





