மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்
X
குமாரபாளையத்தில் மகள் மாயமானதாக தாய் போலீசில் புகார் கூறியுள்ளார்.
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, கே.எஸ். வீதியில் வசிப்பவர் பிரியா, 21. கார்மெண்ட்ஸ் வேலை. இவர் அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு 5 வருடங்கள் முன்பு, பெற்றோர் சம்மதத்துடன் ஜெகதீசன் என்பவருடன் திருமணமாகி, யுகன்யா ஸ்ரீ, 3, என்ற மகள் உள்ளார். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், பிரியா தன் தாய் வீட்டில் ஒரு வருடமாக இருந்து வருகிறார். இவர் ஜன.3ல், மதியம் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. ஜன. 5ல் பிரியா, தன் தாய் அஞ்சலிக்கு போன் செய்து, தான் வேறு வாழ்க்கை தேடிக்கொண்டதாகவும், தன்னை தேட வேண்டாம் எனவும் சொல்லியுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் தாய் அஞ்சலி புகார் செய்துள்ளார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story