தோகைமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கலந்தாய்வு

புதிய நிர்வாகிகள் அறிமுகம், தேர்தல் பணி குறித்து ஆலோசனை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குளித்தலை தொகுதி புதிய நிர்வாகிகள் அறிமுகம், கட்சி உட்கட்டமைப்பு, தேர்தல் பணி, பிஎல்ஏ 2 ஆகியவை குறித்து கலந்தாய்வு கூட்டம் தோகைமலையில் இன்று நடைபெற்றது. தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் கலைவாணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றலரசு, பெரம்பலூர் மண்டல செயலாளர் வழக்கறிஞர் ஸ்டாலின், மண்டல துணைச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் குளித்தலை தொகுதி குறித்து சிறப்புரையாற்றினர். இதில் ஒன்றிய பொருளாளர் மகாதேவன், ஒன்றிய துணை செயலாளர் மலைவேல், கல்வி பொருளாதர இயக்கம் மாவட்ட அமைப்பாளர் பாலகுமார், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சரத்குமார், ரேணுகாதேவி, ராமன், பாலசுப்பிரமணி, அன்னலட்சுமி, ஜோதிமணி, பழனிச்சாமி, வடிவேல், மனோஜ், காளிமுத்து, குமரவேல், நாகேஸ்வரன், குணசேகரன், ரவிச்சந்திரன், வினித், ரத்தினவேல், சங்கப்பிள்ளை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story