உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளம் விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம்

உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளம் விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம்
X
.கபிலர்மலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளம் விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம் ஈடுபட்டனர். 
பரமத்தி வேலூர், ஜன.8:  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை காந்திநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் விவசாயி. இவரது வீட்டில் குடியிருப்பவரின் மின் இணைப்பையும் சந்திரசேகரன் மின் இணைப்பையும் அவரது ஒப்புதல் இல்லாமல் மின் வாரிய அதிகாரிகள் இணைத்துள்ளனர். இதுகுறித்து மின் வாரிய அலுவகத்தில் சென்று கேட்ட போது சரியான தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் சந்திரசேகரன் தனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு கோரி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்துள்ளார். விண்ணப்பம் குறித்து 9 மாதங்களாக சரியான பதில் தெரிவிக்காமல் கிடைப்பில் போட்டு வைத்துள்ளத்தாக விவசாயி சந்திரசேகரன் கவலை தெரிவித்துள்ளார்.  இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கபிலர்மலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை இளம் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் செளந்தரராஜன் தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுடன் கபிலர்மலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் கபிலர்மலை உதவி மின்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செயற்பொறியாளர் வரதராஜன் சம்பவ இடத்திற்கு வந்து இளம் விவசாயகள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று விவசாயி சந்திரசேகரன் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் புதிய மின் இணைப்பு வழங்க முகாந்திரம் இருந்ததை அடுத்து மின் இணைப்பு வழங்க ஒப்புதல் அளித்தத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story