தரகம்பட்டியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

தரகம்பட்டியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
தரகம்பட்டியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரகம்பட்டி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கிய கரும்பு சர்க்கரை பச்சரிசி வேஷ்டி சேலை மற்றும் ரூபாய் 3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கி பொங்கல் வாழ்த்தினை தெரிவித்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் தமிழக அரசுக்கும் எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story