பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி இடையே ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் வண்டி எண் 06151 சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில், 12.01.26 மற்றும் 19.01.26 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து 23.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். வண்டி எண் 06152 தூத்துக்குடி – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், 13.01.26 மற்றும் 20.01.26 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து 17.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் 09.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். இந்த ரயில்களில் ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, படுக்கை வசதி வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு-மற்றும்-பிரேக் வேன் (மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன்) உள்ளது உள்ளது. இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் நாமக்கல் கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை வழியாக மதுரை சென்றடையும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story