கடவூர் வட்டாரத்திற்கான காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் மின்சாரம் வினியோகம் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது

X
Krishnarayapuram King 24x7 |8 Jan 2026 8:36 PM ISTகிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களின் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் மற்றும் மின்சாரம் வினியோகம் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. காணியாளம்பட்டியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு கடவூர் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி (எ) சுதாகர், கடவூர் ஒன்றிய ஆனையர்கள் சுரேஷ்குமார், மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பேசும்போது: கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பழுதாகி பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என்றும், காவிரி குடிநீரை சீராக வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் மற்றும் என்னிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே குறைபாடுகள் உள்ள பகுதிகளில் உடனியாக சரி செய்ய வேண்டும் என்று முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை வழங்கி உள்ளார். இதனால் ஒன்றிய செயலாளர்கள் தங்களது பகுதிகளில் கோரிக்கைகள் இருப்பின் அதனை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர்,கடவூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர், மாவத்தூர், ஆதனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களை ஆய்வு செய்து, காவிரி குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும். காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ள ஊராட்சி பகுதிகளில், அமைக்கப்பட்டு உள்ள காவிரி கூட்டுக்கூடிநீர் குழாய்கள் 10 ஆண்டுகளை கடந்து உள்ளாதால் பழுது ஏற்பட்டு உள்ளது. ஆகவே அனைத்து குழாய்களையும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம்: கடவூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள பாப்பையம்பாடி, வடவம்பாடி, பண்ணப்பட்டி, மஞ்சாநாயக்கன்பட்டி, கீரனூர், வெள்ளப்பட்டி, தென்னிலை உள்பட கடவூர் வட்டாரத்தில் காவிரி குடிநீர் பயன்பாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்து காவிரி குடிநீர் செல்லாத கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் அனைத்து பகுதிகளுக்கும் ஜியோ (இரும்பு) பைப் லைன் அமைத்து கொடுத்தால் பொதுமக்களுக்கு சீராக குடிநிர் வழங்க முடியும். ஆகவே அனைத்து ஊராட்சி கிராமங்களுக்கும் ஜியோ (இரும்பு) பைப் லைன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதேபோல் அடிக்கடி அறிவிப்பு இல்லாமல் மின் தடைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் தொழிலாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் சீரான மின் வினியோகம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் அளித்து வருகின்றனர். ஆகவே அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தெரிவித்தார். அப்போது குறைபாடுகள் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து விரைந்து சரி செய்யப்படும் என்று காவிரி கூட்டுக்சுடிநீர் திட்ட பொறியாளர் மற்றும் மின்சாரத்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பொறியாளர்கள், மின்சாரத்துறையின் செயற்பொறியாளர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் கலந்து கொண்டனர்
Next Story
