காளையப்பட்டியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திண்ணை பிரச்சார நிறைவு நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்றபோது பொதுமக்கள் எழுச்சியோடு வரவேற்றனர்

X
Krishnarayapuram King 24x7 |8 Jan 2026 8:42 PM ISTகடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது
கடவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் காளையபட்டி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திண்ணை பிரச்சார நிறைவு நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்றபோது பொதுமக்கள் எழுச்சியோடு வரவேற்றனர். கரூர் மாவட்டம் கடவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பின் கீழ் திண்ணைப் பிரச்சாரம், மக்கள் சந்திப்பு பயணம் நிகழ்ச்சி முன்னால் சேர்மன் மற்றும் கடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சி நேற்று காளையபட்டி ஊராட்சியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கடவூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மரியலூயிஸ், பொன்னுச்சாமி, ஒன்றிய பொருளாளர் ஆரிப்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காளையபட்டி ஊராட்சியில் உள்ள சின்னாண்டிபட்டி, காளையபட்டி வாக்குச்சாவடி மையங்கள் அமைந்து உள்ள குக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று வீடு வீடாக திமுக ஆட்சியின் சாதனைகள் கொண்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் அனைத்து தேவைகளையும் அறிந்து திமுக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்று முன்னால் சேர்மன் செல்வராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரையும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் முன்னால் சேர்மன் மற்றும் கடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் பேசும்போது: தலைமை கழகத்தின் ஆலேசனைப்படி, கரூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழி காட்டுதல்படி 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிக்கான பணிகள் முழுவீச்சில் செய்து வருகிறோம். வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிகளை நமது காளையபட்டி ஊராட்சி வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று களப்பணிகள் செய்து வருகிறோம். இதற்காக நமது அரசு செய்து வரும் திட்டங்களை மக்களிடம் நினைவு கூறும் வகையில் தற்போது மக்களை நேரில் சந்திக்க வந்து உள்ளோம். நமது கடவூர் வட்டாரத்தில் உள்ள காணியாளம்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய கட்டிடம், பொன்னணியாறு அணையில் சுற்றுலாத்துறை மூலம் உணவகத்துடன் கூடிய படகு குழாமை, தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம், கடவூர் பகுதிகளில் புதிய நூலகக் கட்டிடங்கள், வெள்ளபட்டியில் தாய்சேய் நல விடுதி உள்பட எண்ணற்ற திட்டங்களை நமது திமுக அரசு செய்து உள்ளது. இதேபோல் நமது திராவிட மாடல் அரசானது மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம், இல்லம் தேடி கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம்; உள்பட எண்ணற்ற திட்டங்கள் மூலம் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆகவே நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து வருகின்ற 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது நமது திமுக அரசுக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முருகேசன், ஆனந்த், அபு, வேல்முருகன், மணிகண்டன், காளிமுத்து, ஆனந்த் கிளைக்கழக நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story
