பாஜக கட்சியில் ஆரணி தெற்கு, கிழக்கு ஒன்றிய தலைவர்கள் நியமனம்.

பாஜக கட்சியில் ஆரணி தெற்கு, கிழக்கு ஒன்றிய தலைவர்கள் நியமனம்.
X
பாஜக கட்சியில் ஆரணி தொகுதி, தெற்கு, கிழக்கு ஒன்றிய புதிய தலைவர்களை மாநில தலைமை நியமனம் செய்து அறிவித்துள்ளனர்
ஆரணி, பாஜக கட்சியில் ஆரணி தொகுதி, தெற்கு, கிழக்கு ஒன்றிய புதிய தலைவர்களை மாநில தலைமை நியமனம் செய்து அறிவித்துள்ளனர். பாஜக கட்சியைச் சேர்ந்த ஆரணி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆரணி தெற்கு ஒன்றிய தலைவராக கேசவன், ஆரணி கிழக்கு ஒன்றிய தலைவராக பஞ்சாட்சரம் ஆகியோரை மாவட்ட தலைவர் கவிதாவெங்கடேசன் பரிந்துரையின் பேரில் மாநில துணைத்தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்கரவர்த்தி நியமனம் செய்தார்,. நியமனம் செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை இளைஞர் அணி மாவட்ட தலைவர் சரவணன், விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் குணாநிதி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் ராஜேஷ் மற்றும் பிச்சாண்டி ஆகியோர் சால்வை அனைத்து அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story