ஊர்க்காவல் படை வீரர் விபத்தில் பலி

X
Krishnarayapuram King 24x7 |9 Jan 2026 12:36 PM ISTமாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி பகுதியில் ஊர் காவல் படையை சேர்ந்தவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே ஆர்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் மதியழகன்.இவரது மகன் தினகரன் (30). இவர், கரூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் தனது பைக்கில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி முடக்கு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். தகவலறிந்த மாயனூர் போலீசார் தினகரனை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தினகரன், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இது குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
