தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு மக்களை சந்தித்து மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை திமுக உருவாக்க வேண்டும். கரூரில் வேல்முருகன் பேட்டி.
Karur King 24x7 |9 Jan 2026 4:48 PM ISTதேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு மக்களை சந்தித்து மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை திமுக உருவாக்க வேண்டும். கரூரில் வேல்முருகன் பேட்டி.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு மக்களை சந்தித்து மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை திமுக உருவாக்க வேண்டும். கரூரில் வேல்முருகன் பேட்டி. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு நியமன கடிதம் வழங்குதல் மற்றும் இணைப்பு விழா கட்சியின் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், தலைமையில் கரூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ஏ.ஜி. ரவி, கரூர் தொகுதி செயலாளர் இளந்தமிழன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி மாநில, தேசிய பொறுப்பாளர்கள் ஆளுக்கொரு கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். ஆயினும் தற்போது வரை எங்கள் கட்சி உள்பட திமுக கூட்டணியில் தான் உள்ளோம். தேர்தல் காலத்தில் இது போன்ற சூழல்கள் அனைத்தும் ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் போட்டியிட கூடுதல் இடங்களை பெறுவதற்காக செய்யும் ஒரு முயற்சியாக இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தெரிவித்தார். அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூடுதல் இடங்களை கேட்குமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தற்போது வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது உங்களுக்கே தெரியும்.ஆகையால் பத்திரிக்கை மட்டும் ஊடகவியலாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு கூடுதல் இடங்களை பெற்று தருமாறு கிண்டலாக கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக, அதிமுக, விஜய்,மற்றும் சீமான் தலைமையில் நான்கு அணிகளாக போட்டிகள் இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் என பலதரப்பு மக்களிடமும் கருத்துக்கள் கேட்டு கடந்த முறை தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு மக்களை சந்தித்து மீண்டும் திமுக ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்பதுதான் கூட்டணி கட்சிகளில் நிலைப்பாடு என்றார். தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை தடுக்க வேண்டும் என்பதற்காக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்திலே அதற்காக வாதாடி அரசே மணல் விற்பனையில் ஈடுபடுவதற்கான சூழலை வளர்த்தவன் நான். அந்த அடிப்படையிலே மணல் கொள்ளையை எந்த அரசு செய்தாலும் அது ஏற்க இயலாது. இது குறித்தும் தற்போதைய முதலமைச்சர் இடம் எடுத்து கூறினேன். உடனே மணல் கடத்தலை தடுப்பதற்காக எடுத்த நடவடிக்கையை மணல் மாபியாக்கள் நீதிமன்றத்தில் சென்று தடை ஆணை பெற்று விட்டார்கள். இதனால் தமிழகத்தில் கட்டுப்பாடே இல்லாத நிலையில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். பேட்டி: வேல்முருகன்- நிறுவனத் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
Next Story






