சவுண்டம்மன் திருவிழா பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

சவுண்டம்மன் திருவிழா பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
X
குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
குமாரபாளையம் சேலம் சாலை ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் கோவிலில் ஆண்டுதோறும் ;பொங்கல் சமயத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவிற்காக கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. முகூர்த்தக்காலுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பெரியோர்கள் பலர் சேர்ந்து பிடிக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஜன. 14ல் மாலை 05:00 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு, ஜன. 15ல் காலை 10:00 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து சாமுண்டி அழைப்பு, மாலை 04:00 மணிக்கு பெரிய பொங்கல் பூஜை, ஜன. 16ல் மாலை 06:00 மணிக்கு மகா ஜோதி அழைத்தல், ஜன. 17ல் காலை 07:30 மணிக்கு அம்மன் கோவிலிலிருந்து மஞ்சள் நீராட்டு மெரவணை, மாலை 06:00 மணிக்கு சத்தாபரணம் அலங்கார மெரவணை மற்றும் வாண வேடிக்கை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள். அனைத்து நிகழ்ச்சியிலும் வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வருவார்கள். இதனை காண பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருவது வழக்கம்.இந்த விழாவிற்காக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Next Story