நாமக்கல்லில் பழைய டயர் வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்!-பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு.

X
Namakkal King 24x7 |9 Jan 2026 9:35 PM ISTபாராளுமன்ற உறுப்பினர் மூலம் பாரத பிரதமரின் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு டயர் வியாபாரிகள் சங்க உறுப்பினரின் குடும்பங்கள் இருக்கும் உதவிகளை பயன்படுத்துவது குறித்து பேசினார்.
நாமக்கல் பழைய டயர் வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தலைவர் காந்தகிரி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் தர்மன், பொருளாளர் ராஜா, முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.பழைய டயர் வியாபாரிகளுக்கு மொத்தமாக அனைவரும் ஒரே இடத்தில் வியாபாரம் செய்ய அரசின் சார்பில் இடம் ஒதுக்கி தர கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் இது சம்பந்தமாக பேசி அரசு விதிமுறைகள்படி செய்ய ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் பாரத பிரதமரின் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு உறுப்பினரின் குடும்பங்கள் இருக்கும் உதவிகளை பயன்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்.இக்கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொருளாளர் சசிகுமார், திசா கமிட்டி உறுப்பினரும் டயர் ரீட்ரேட் இன் உரிமையாளர் சங்கத்தின் செயலாளரும், விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன்,நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட தீரன் தொழிற்சங்க பேரவை செயலாளர் ' 'குரு'இளங்கோ, மாவட்ட இணை செயலாளர் தமிழரசு உள்ளிட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
