நாமக்கல் மாநகரப் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா! -கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்.

X
Namakkal King 24x7 |9 Jan 2026 10:01 PM ISTஐந்து ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்த 469 பயனாளிகளுக்கு ரூ.61,92,65,950 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வார்டுகளில், அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போரில் பெரும்பாலானோர் இதுவரை வீட்டுமனைப் பட்டா பெறாமல் உள்ளனர். அவர்கள் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் வீட்டுமனைப்பட்டா கோரி மனு அளித்து வருகின்றனர்.அந்த வகையில், நாமக்கல் செம்பளிகரடு, எம்ஜிஆர் நகர், ஆர்.பி.புதூர், மேட்டுத்தெரு, என்.கொசவம்பட்டி, மரூர்பட்டி, சின்னமுதலைப்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, வீசாணம், விட்டமநாயக்கன்பட்டி ஆகிய 10 இடங்களுக்கு உள்பட்ட 469 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் ராமாபுரம்புதூரில் நடைபெற்றது. துணை மேயர் செ.பூபதி வரவேற்றார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ ,மேயர் து.கலாநிதி,மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், வட்டாட்சியர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமை வகித்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்த 469 பயனாளிகளுக்கு ரூ.61,92,65,950 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறை அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
