மகளிருக்கு மாபெரும் கோலப்போட்டி

மகளிருக்கு மாபெரும் கோலப்போட்டி
X
வெற்றி பெற்றவளுக்கு கிரைண்டர், மிக்ஸி, ஹாட் பாக்ஸ்,
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பொங்கலை முன்னிட்டு மகளிருக்கு மாபெரும் கோலப்போட்டி பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது . கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பொங்கலை முன்னிட்டு மகளிருக்கு பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகம் அருகில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
இளம்பை.இரா.தமிழ்செல்வன்
தலைமையில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர். அருணாச்சலம் முன்னிலையில் நடைபெற்றது.போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மகளிருக்கு கிரைண்டர், மிக்ஸி, குக்கரும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மகளிருக்கும் வெண்கல குத்துவிளக்கும் பரிசாக மாவட்ட கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை.செழியன், அனைத்துலக எம்ஜிஆர் துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட கழக அவை தலைவர் குன்னம்.குணசீலன், மாவட்ட கழக இணை செயலாளர் ராணி, பொதுக்குழு உறுப்பினர் கே. ஏ.ரெங்கநாதன், ஒன்றிய கழக செயலாளர் என்.கே.கர்ணன், டி.என். சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், உதயம்.ரமேஷ், செல்வமணி, அழகுதுரை,ஏ.கே.ராஜேந்திரன், ராமராஜ் பேரூர் கழக செயலாளர்கள் செந்தில்குமார், விவேகானந்தன் மாவட்ட அணி செயலாளர்கள் வீரபாண்டியன், கருணாநிதி,காவியா ரவி, செந்தில் ராஜன், கணேசன், பாலாஜி, சந்திரகாசன், ஜமால் முகமது, ராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story