குளித்தலையில் தமிழ் தேசியப் போராளி நினைவு தினத்தில் வீரவணக்கம்

மறைந்த பசுபதி பாண்டியன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழ் தேசிய போராளி மறைந்த பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இன்று நடைபெற்றது. வளரும் தமிழகம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் பசுபதி பாண்டியன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவி வீரவணக்கம் செலுத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக வளரும் தமிழகம் கட்சி மாணவரணி மாநில செயலாளர் தமிழன் துரைராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றல் அரசு, தமிழர் தேசம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் தீனா தேவேந்திரன், சமூகப் பற்றாளர் வழக்கறிஞர் வாசுதேவன், விசிக குளித்தலை ஒன்றிய துணை செயலாளர் கோட்டை மகாலிங்கம், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் குளத்தூர் முருகேசன், புதுப்பட்டி பாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
Next Story