நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கிய மகளிர் அணி

விமன் இந்தியா மூவ்மெண்ட்
எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் இன்று தனது 11ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடி வருகின்றது. இதனை முன்னிட்டு களக்காடு அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் பழ வகைகள் வழங்கி குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இதில் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி தலைவர் ஜன்னத்துல் பிர்தௌஸ், பொருளாளர் மெஹராஜ் பேகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story