ராமநாதபுரம் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய அமைச்சர்
Ramanathapuram King 24x7 |10 Jan 2026 5:53 PM ISTகல்லூரி மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய அமைச்சர் ராஜ கண்ணப்பன்
ராமநாதபுரம் மாவட்டம் கல்லூரி மாணவிகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் - வரும் 17ஆம் தேதி முதலமைச்சர் ராமநாதபுரம் வருகை எனவும் தகவல் ராமநாதபுரம் மாவட்ட அனைத்து தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தைத்திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுடன் வேலு மனோகரன் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது மாணவிகள் புது பானையில் பொங்கல் வைத்து கரும்பு கட்டி குலவை இட்டு பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்து சொல்லி பொங்கல் விழாவை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர் மேலும் உரியடி விழா பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது இவ்விழாவிற்கு பால்வளம் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார் அதன் பின்பு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் அப்போது பேசுகையில் தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யப்படும் மேலும் வருகின்ற 17ஆம் தேதி பரமக்குடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தர உள்ளார் அங்கும் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் முதல்வரை சந்திக்க வைப்பேன் தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சனைகளையும் சுமூகமாக தமிழ்நாடு முதலமைச்சர் தீர்த்து பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறார் என்று பேசினார் தனியார் பள்ளிகளின் செய்தி தொடர்பாளர் டாக்டர் சலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story



