சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரியில் கிராமியத் திருவிழா – மாபெரும் தைப்பொங்கல் கொண்டாட்டம்
இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் சி. முத்துசாமி தலைமை தாங்கி பேசுகையில், “தைப்பொங்கல் என்பது வெறும் திருவிழா அல்ல, நடைமுறையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய உயரிய பண்பாடு” எனக் கூறி மாணவர்களுக்கு வழிகாட்டினார்.கல்லூரி துணைத் தலைவர் மு. ஸ்ரீதர் முன்னிலை வகித்து, மாணவர்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமூக பொறுப்புணர்வு வளர வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் மகாதேவன், உரையாற்றினார். அவர் தனது உரையில், “தமிழர் திருநாள் என்பது தமிழர்களின் மனிதநேய சிந்தனையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அடையாளமாக திகழ்கிறது” எனக் கூறி, பாரம்பரிய விழாக்கள் இளம் தலைமுறையினரிடையே சமூக மதிப்புகளை விதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என தெரிவித்தார்.விழாவின் முக்கிய அம்சமாக மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து, ஜாதி, மத, பேதமின்றி சமத்துவ உணர்வுடன் விழாவைக் கொண்டாடினர். கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவை விழாவிற்கு கூடுதல் சிறப்பை அளித்தன.விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்,பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு கல்லூரி தலைவர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு சமத்துவம், ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை போற்றும் இவ்விழாவை நினைவாகக் கொண்டாடினர்.














